ரோகித்-ரகானே '267'

Indian News

Indian News

Author 2019-10-20 15:35:33

img

ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியாவின் ரோகித் சர்மா, ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்தது.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் (10), புஜாரா (0), கேப்டன் கோஹ்லி (12) ஏமாற்றினர். பின் இணைந்த ரோகித் சர்மா, அஜின்கியா ரகானே ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இந்த ஜோடி 267 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில், 4வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடியானது. இதற்கு முன், சமீபத்தில் புனேயில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியாவின் கோஹ்லி-ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

* தவிர, ரோகித்-ரகானே ஜோடி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடிகள் வரிசையில் 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களில் ரோகித்-மயங்க் அகர்வால் (317 ரன், முதல் விக்கெட், இடம்: விசாகப்பட்டனம், 2019), சேவக்-டிராவிட் (268 ரன், 2வது விக்கெட், இடம்: சென்னை, 2008) ஜோடிகள் உள்ளன.

இத்தொடரில் ரோகித் சர்மா 3 (176, 127, 117*), மயங்க் அகர்வால் 2 (215, 108) சதமடித்துள்ளனர். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய துவக்க வீரர்கள் முதன்முறையாக 5 சதமடித்துள்ளனர். இதற்கு முன், 3 தொடர்களில் (எதிர்: விண்டீஸ், 1970-71, 1978-79 மற்றும் எதிர்: இலங்கை, 2009-10) இந்திய துவக்க வீரர்கள் தலா 4 சதமடித்திருந்தனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD