ரோஹித் 150..! ஜாம்பவான்களின் சாதனை முறியடிப்பு

Lankasri

Lankasri

Author 2019-10-20 14:21:03

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் ரோஹித் ஷர்மா 150 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், ரோஹித் ஷர்மா நங்கூரம் போல் நின்று சதம் அடித்தார். 95 ஓட்டங்களில் இருந்த ரோஹித் ஷர்மா, சிக்சர் அடித்து சதம் எட்டினார். இந்திய அணியில் சேவாக் மட்டுமே சிக்சர் அடித்து சதம் அடிப்பார்.

அதன் பின்னர், தற்போது ரோஹித் அவரைப் போல் சிக்சர் அடித்து சதம் எட்டியதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக, மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷிம்ரான் ஹெட்மயர்(15 சிக்சர்கள்) இருந்தார்.

ரோஹித் ஷர்மா நேற்று 4 சிக்சர்கள் அடித்ததின் மூலம் அதனை முறியடித்தார். மேலும், ஒரே தொடரில் மூன்று அல்லது அதற்கும் மேல் சதம் அடித்த இந்திய துவக்க வீரர்கள் வரிசையில், கவாஸ்கருக்கு அடுத்த ஒரே வீரராக ரோஹித் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று ரோஹித் 150 ஓட்டங்களைக் கடந்துள்ளார். மூன்றாவது முறையாக அவர் 150 ஓட்டங்களை எட்டியுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN