வங்கதேச அணி 'ஸ்டிரைக்' வாபஸ்

Indian News

Indian News

Author 2019-10-25 06:06:13

img

தாகா: வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் 'ஸ்டிரைக்கை' வாபஸ் பெற்றனர். இதனால், திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எதிரான தொடர் நடக்கவுள்ளது.

அடுத்த மாதம், இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி நவ. 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. அடுத்த இரு போட்டிகள் முறையே ராஜ்கோட் (நவ.7), நாக்பூரில் (நவ.10) நடக்கும். இதற்கிடையே, பி.பி.எல்., தொடரை மீண்டும் தனியார் உரிமையாளர்களை கொண்டு நடத்துவது, வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த தொகையை அதிகரிப்பது என 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற, வங்கதேச வீரர்கள் வலியுறுத்தினர். இதை நிறைவேற்றும் வரை, போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என டெஸ்ட், 'டுவென்டி-20' கேப்டன் சாகிப் அல் ஹசன் உள்ளிட்ட வீரர்கள் அறிவித்தனர்.

இதனால், இந்திய தொடர் நடப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் தீர்வு

இப்பிரச்னைக்கு தீர்வு காண, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உத்தரவிட்டார். இதனையடுத்து, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மற்றும் வீரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப்பின், பத்திரிகையாளர்களை சந்தித்தனர். சாகிப் கூறுகையில்,'' எங்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக, பி.சி.பி., உறுதி அளித்துள்ளது. இதை ஏற்று, 'ஸ்டிரைக்கை' வாபஸ் பெறுகிறோம். இந்திய தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளோம்,'' என்றார்.

இதனால், இந்திய தொடர் திட்டமிட்டபடி நடப்பது உறுதியாகி உள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD