வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் வேலைநிறுத்தம் ரத்து

Indian News

Indian News

Author 2019-10-25 03:42:00

ஊதிய உயர்வு உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தலைமையில் 30-க்கு மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கடந்த சில நாள்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இந்திய சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டோம் எனவும் எச்சரித்தனர். இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் சிக்கலுக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு வரை 2 மணி நேரத்துக்கு மேலாக இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வீரர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படும் என உறுதி கூறப்பட்டது.

இதனால் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக வீரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நவம்பர் மாதம் நடக்கவுள்ள இந்திய தொடருக்கு ஏற்படவிருந்த பாதிப்பு நீங்கியது.
வங்கதேச வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் மற்றும் இதர இயக்குநர்கள், விரைவில் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறியுள்ளனர். ஆலோசனை சிறப்பாக அமைந்தது என ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD