வங்கதேச கேப்டனுக்கு தடை * ஐ.சி.சி., நடவடிக்கை

Indian News

Indian News

Author 2019-10-29 22:40:20

img

துபாய்: 'பிக்சிங்' குறித்த தகவல்களை மறைத்த வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசனுக்கு, ஐ.சி.சி., இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது.

வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் 32. உலகத் தரவரிசையில் ஒருநாள் அரங்கில் 'நம்பர்-1', 'டுவென்டி-20'ல் 'நம்பர்-2', டெஸ்டில் 'நம்பர்-3' ஆல் ரவுண்டராக உள்ளார். கடந்த வாரம் சம்பள உயர்வு கேட்டு இவரது தலைமையில், வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.பி.,) எதிராக வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

பின் பிரச்னை பேசி தீர்க்கப்பட்டது. அதேநேரம் விதிகளை மீறி தொலைபேசி நிறுவனத்துடன் சாகிப் ஒப்பந்தம் செய்தது ஏன் என விளக்கம் தருமாறு பி.சி.பி., கடிதம் அனுப்பியது.

ஒருவேளை இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், சாகிப் இந்திய தொடரில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டது.

இதனால் இந்திய தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதை தவிர்த்த சாகிப், பி.சி.பி., தலைவரின் அழைப்பையும் ஏற்கவில்லை. புதிய திருப்பமாக, கடந்த இரு ஆண்டுக்கு முன் சர்வதேச போட்டியில் 'பிக்சிங்' செய்ய புக்கி ஒருவர், சாகிப்பை அணுகிய விஷயம் தற்போது வெளியானது.

புக்கிகள் அணுகியதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட சாகிப், அப்போது யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஆனால் பி.சி.பி., சார்பில் விசாரிக்கப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) தகவல் தெரிவிக்கப்பட்டது. 'பிக்சிங்' புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்ட ஐ.சி.சி., முறைப்படி தகவல் தெரிவிக்காத சாகிப்பிடம் விசாரணை நடத்தியது.

இதில் சாகிப் தனது தவறை சாகிப் ஒப்புக் கொண்டார். இதையடுத்து இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதில் ஒரு ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட தடை என்பதால் வரும் 2020, அக்டோபர் மாதத்துக்குப் பின் போட்டிகளில் பங்கேற்கலாம்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD