வங்கதேச வீரர் சைபுதின் விலகல்

Indian News

Indian News

Author 2019-10-21 11:15:12

img

தாகா: இந்திய அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரிலிருந்து காயம் காரணமாக வங்கதேச வீரர் முகமது சைபுதின் விலகினார்.

இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் நவம்பர் 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் ராஜ்கோட் (நவ. 7), நாக்பூரில் (நவ. 10) நடக்கும். இதற்கான, 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் துவக்க வீரர் தமிம் இக்பால், 'ஆல் ரவுண்டர்' முகமது சைபுதின் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், முதுகுப்பகுதி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து சைபுதின் விலகி உள்ளார்.

காயத்தின் தன்மை அறிய, 'ஸ்கேன்' செய்துபார்த்தபோது முழுவதும் குணமாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் அபேதீன் கூறுகையில்,'' தற்போதைய நிலையில், சைபுதின் விளையாடக்கூடிய உடல்தகுதியில் இல்லை. இவரது காயம் குறித்து, 'பிசியோதெரபிஸ்ட்' உடன் இன்று பேச உள்ளேன்,'' என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD