வங்காளதேசத்தை வெளுத்து கட்டிய இந்திய அணி.. நடந்தது என்ன?

Smart cock

Smart cock

Author 2019-11-08 09:53:15

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடுகிறது.

imgThird party image reference

நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலாவதாக பேட்டிங் செய்ய வந்த வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதலில் விக்கெட் எடுத்ததில் தடுமாற்றம் கண்ட இந்திய அணி யின் பவுலர்கள் பின்னர் சீரான இடைவேளைக்கு பின் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் வங்காளதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது.

imgThird party image reference

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி விரைவாக ரன்களை சேர்த்தனர் ஒருமுனையில் ரோகித் சர்மா தாண்டவமாட தவான் அவருக்கு பக்கபலமாக நிதானமாக ஆடினார். ரோகித் சர்மா 23 பந்துகளில் தனது இருபத்தி இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார் இது அவரது இரண்டாவது அதிவேகமான அரைசதம் ஆகும்.

imgThird party image reference

தவான் 31 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுக்க மறுமுனையில் தாண்டவம் ஆடிய ரோகித் சர்மா 6 சிக்சர் மற்றும் ஆறு பவுண்டரி அடித்திருந்த நிலையில் 85 ரன்களில் ஏறக்குறைய போட்டியிட்டு வென்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இது அவருடைய நூறாவது டி20ஐ போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் களமிறங்கிய சுரேஷ் ஐயர் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார் இதன் மூலம் 15.4 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி டி20 வரும் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் கடைசி போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.


READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD