வங்காளதேச தொடரிலிருந்து தமிம் இக்பால் விலகல்
வங்காளதேச டி20 கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், ஷிபம் டுபே, ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய தொடரில் சொந்த காரணங்களால் தமிம் இக்பால் பங்கேற்க மாட்டார். தமிம் இக்பாலுக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.