வரலாற்று சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்திய அணி..!

News 7

News 7

Author 2019-10-13 10:19:49

img

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைப்பெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக உமேஷ் யாதவ், அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்துவீச்சால் தமது முதல் இன்னிங்சில் 275 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது.

இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று, தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ரன் கணக்கை தொடங்காமலேயே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த டி ப்ரியூன், உமேஷ் யாதவிடம் தமது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த கேப்டன் டூபிளெசிஸ், அஸ்வின் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடி வந்த தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 48 ரன்களிலும் ஆல் ரவுண்டர் பவுமா 38 ரன்களிலும் வெளியேரினர்., அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டி காக், 5 ரன்கள் எடுத்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் போல்டானார்.

பின்னர் தோல்வியை தவிர்க்க தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் போராடிய போதும், இந்திய அணி சிறப்பான பந்துவீச்சால் அடுத்த வந்த முத்துசாமி, மஹாராஜ், ரபடா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். விடாமல் போராடிய பிலாண்டர் 37 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷமி 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில், தொடர்ந்து 11 தொடர்களில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 2004ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற 26 டெஸ்ட் தொடர்களில் ஒரே ஒரு தொடரில் மட்டும் இந்திய அணி தோற்றுள்ளது.

இப்போட்டியில் 254 ரன்களை குவிந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN