வருவாரா வங்கதேச கேப்டன் சாகிப்

Indian News

Indian News

Author 2019-10-29 22:40:20

img

தாகா: 'டுவென்டி-20', டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள வங்கதேச அணி நாளை இந்தியா வருகிறது. இதில் கேப்டன் சாகிப் அல் ஹசன் இடம் பெறுவாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வீரர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீபத்தில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். வங்கதேச கிரிக்கெட் போர்டுடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் சுமூக உடன் பாடு ஏற்பட, மூன்று நாள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சிக்கலில் சாகிப்

இந்த போராட்டத்துக்கு கேப்டன் சாகிப் அல் ஹசன் தான் தலைமை தாங்கினார். அதேநேரம் வங்கதேச அணியின் 'ஸ்பான்சராக' இருந்த கிராமீன்போன் நிறுவனத்தின் துாதராக சாகிப் ஒப்பந்தம் ஆனார்.

வங்கதேச வீரர்கள், தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்பது விதி. இதை மீறியதால் சாகிப்பிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுபோல வேறு சில வீரர்களும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

உறுதி இல்லை

இதனிடையே இந்திய தொடருக்கான மூன்று பயிற்சி முகாமில் சாகிப், இரு நாட்களாக பங்கேற்கவில்லை. இதுகுறித்து பி.சி.பி., தலைவர் நஜ்முல் ஹாசன் கூறுகையில்,'' இந்தியா கிளம்பும் போது, திடீரென நாங்கள் செல்ல மாட்டோம் என்றால் என்ன செய்வது. ஒட்டுமொத்த அணியையும் மாற்ற வேண்டியது இருக்கும். இதுகுறித்து பேச சாகிப்பை அழைத்தேன். அவர் என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை. வேறு சில வீரர்களிடமும் இந்தியா தொடர் குறித்து பேசியுள்ளேன். சாகிப் வழியில் மற்ற வீரர்கள் செல்வரா எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சாகிப் உள்ளிட்ட சில வீரர்கள் இந்திய தொடரில் பங்கேற்க மாட்டர் என உறுதியாகச் சொல்கிறேன்,'' என்றார்.

இரண்டாம் தர அணி

வங்கதேச வீரர்கள் பிரச்னை இன்னும் முடியுவில்லை எனத் தெரிகிறது. மனைவி பிரசவத்திற்கு செல்வதால் கோல்கட்டா டெஸ்டில் மட்டும் பங்கேற்க மாட்டேன் என்ற துவக்க வீரர் தமிம் இக்பால், பின் தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார். தற்போது சாகிப் உட்பட வேறு சிலரும் விலகும் முடிவில் உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியாவுக்கு இரண்டாம் தர அணி வருமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD