வலிமையாக மீண்டு வருவேன் * பும்ரா நம்பிக்கை

Indian News

Indian News

Author 2019-09-26 02:52:19

img

புதுடில்லி: ''காயத்தில் இருந்து மீண்டு, வலிமையாக மீண்டு வர திட்டமிட்டுள்ளேன்,'' என பும்ரா தெரிவித்தார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 25. கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்டில் அறிமுகம் ஆனார். 12 டெஸ்டில் 62 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். சொந்தமண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருந்தார்.

தற்போது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட லேசான எலும்பு முறிவு காரணமாக தொடரில் இருந்து விலகினார். அடுத்து வங்கதேச தொடரிலும் இடம் பெறமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்குப் பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

அணியில் இருந்து விலகியது குறித்து பும்ரா வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'விளையாட்டில் காயம் ஏற்படுவது, பின் மீண்டு வருவது என்பது சகஜம்.

தற்போதைய நிலையில் இருந்து நான் மீண்டு வர வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இப்போது இருப்பதை விட இன்னும் வலிமையான முறையில் மீண்டு வருவதே எனது லட்சியம். இதில் உறுதியாக உள்ளேன்,' என தெரிவித்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN