விஜய் ஹசாரே: கர்நாடகா சாம்பியன்

Indian News

Indian News

Author 2019-10-25 22:40:41

img

பெங்களூரு: தமிழக அணிக்கு எதிரானவிஜய் ஹசாரே டிராபி பைனலில் மழை குறுக்கிட கர்நாடகா அணி 60 ரன் வித்தியாசத்தில் வி.ஜே.டி., முறைப்படி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தமிழகம், கர்நாடகா அணிகள் மோதிய விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) கிரிக்கெட் தொடருக்கான பைனல் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற கர்நாடகா அணி கேப்டன் மணிஷ் பாண்டே 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மிதுன் 'ஹாட்ரிக்': தமிழக அணிக்கு முரளி விஜய் (0), அஷ்வின் (8) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய அபிமன்யு முகுந்த் (85), பாபா அபராஜித் (66) அரைசதம் கடந்தனர்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் (11), வாஷிங்டன் சுந்தர் (2) நிலைக்கவில்லை. விஜய் சங்கர் (38) ஆறுதல் தந்தார். கடைசி ஓவரின் 3வது பந்தில் ஷாருக்கானை (27) அவுட்டாக்கிய அபிமன்யு மிதுன், அடுத்த 2 பந்தில் முகமது (10), முருகன் அஷ்வின் (0) ஆகியோரை அவுட்டாக்கி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

தமிழக அணி 49.5 ஓவரில், 252 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கர்நாடகா அணி சார்பில் மிதுன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

மழை குறுக்கீடு: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கர்நாடகா அணிக்கு தேவ்தத் (11) ஏமாற்றினார். பின் இணைந்த லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், தமிழக பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் கடந்தனர். கர்நாடகா அணி 23 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையால் போட்டி கைவிடப்பட்டது. ராகுல் (52), அகர்வால் (69) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதனையடுத்து உள்ளூர் போட்டிக்கான வி.ஜே.டி., முறைப்படி 23 ஓவரில், 87 ரன் தேவைப்பட்ட நிலையில் 146 ரன்கள் எடுத்திருந்த கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 4வது முறையாக (2013-14, 2014-15, 2017-18, 2019-20) கோப்பை வென்றது. தொடர் நாயகன் விருதை அபிமன்யு மிதுன் (கர்நாடகா) வென்றார்.

தனது 30வது பிறந்த நாள் கொண்டாடிய அபிமன்யு மிதுன், தமிழகத்தின் ஷாருக்கான், முகமது, முருகன் அஷ்வின் ஆகியோரை தொடர்ச்சியாக அவுட்டாக்கினார். இதன்மூலம் விஜய் ஹசாரே டிராபியில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய முதல் கர்நாடகா பவுலரானார். தவிர, விஜய் ஹசாரே டிராபி பைனலில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் பவுலரானார். ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய 2வது பவுலரானார். ஏற்கனவே முரளி கார்த்திக் இச்சாதனை படைத்திருந்தார்.
பெங்களூருவை சேர்ந்த அபிமன்யு மிதுன், இதுவரை இந்தியாவுக்காக 4 டெஸ்ட் (2010-2011), 5 ஒருநாள் போட்டிகளில் (2010-11) விளையாடி உள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD