விஜய் ஹசாரே டிராபி :பரோடாவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-04 23:30:49

img

இந்தியாவின் மிக்கப்பெரிய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வாதரேராவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - பரோடா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீச்சை நேர்வு செய்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் 38 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் களமிறங்கிய டெல்லி 37.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராணா 27 ரன்களும், விக்கெட் கீப்பர் ரவாட் 21 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பரோடா 33.2 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்து டக்வெர்த் லூயிஸ் முறையில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தேவ்தர், குனால் பாண்டியா தலா 20 ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணி தரப்பில் நவதீப் சைனி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD