விஜய் ஹஸாரே கோப்பை தமிழகம் 3-ஆவது வெற்றி

Indian News

Indian News

Author 2019-09-29 02:48:00

img

விஜய் ஹஸாரே கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் சி பிரிவு ஆட்டத்தில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பிகாரை வீழ்த்தியது.
முதலில் ஆடிய பிகார் அணி 50 ஓவர்களில் 217/7 ரன்களை குவித்தது. அந்த அணியில் கேப்டன் பாபுல் குமார் 110 ரன்களை விளாசினார்.
கேசவ் குமார் 35 ரன்களை சாய்த்தார். தொடக்கத்தில் சரிவை சந்தித்த பிகார், கேப்டன் பாபுல் ஆட்டத்தால் மீண்டது. தமிழகத் தரப்பில் முகமது 3-33 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய தமிழக அணி தரப்பில் அபிநவ் முகுந்த் 37, ஜெகதீசன் 24 வலுவான தொடக்கத்தை அளித்தனர்.
பின்னர் விஜய் சங்கர் 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 91 ரன்களுடனும், பாபா அபராஜித் 52 ரன்களுடனும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

46.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து தமிழகம் 218 ரன்களுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது தமிழகத்தின் 3-ஆவது வெற்றியாகும்.
குஜராத் அணி 281/9) 35 ரன்கள் வித்தியாசத்தில் ம.பி. (246) வீழ்த்தியது. மேற்கு வங்கம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சர்வீசûஸ சாய்த்தது.
குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் சத்தீஸ்கர் (318/5) 5விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை (317/5)/யும், கர்நாடகம் 60 ரன்கள் வித்தியாசத்தில் கேரளத்தையும் சாய்த்தன. (கர்நாடகம் 294, கேரளம் 234). ஹைதராபாத் 121 ரன்கள் வித்தியாசத்தில் செளராஷ்டிரத்தை வென்றன.
புதுச்சேரி-உத்தராகண்ட், மணிப்பூர்-சிக்கிம், மேகாலயம்-அருணாசலப்பிரதேசம், பரோடா-விதர்பா, தில்லி-ஹிமாசலம், பஞ்சாப்-ஒடிஸா ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD