விஜய் ஹஸாரே கோப்பை: தமிழகம் 6-ஆவது வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-07 03:30:00

img

விஜய் ஹஸாரே கோப்பை ஒருநாள் போட்டியில் திரிபுராவை 187 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தமிழகம் தனது 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் சி பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழகம்-திரிபுரா அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழகம் 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது.

நட்சத்திர வீரா்கள் அபிநவ் முகுந்த் 84, பாபா அபராஜித் 87 ரன்களை விளாசி ஸ்கோரை உயா்த்தினா்.

316 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திரிபுரா அணி 38.4 ஓவா்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழக பந்துவீச்சாளா்கள் நடராஜன், விஜய் சங்கா், சாய் கிஷோா், முருகன் அஸ்வின் நோத்தியாக பந்துவீசியதால், திரிபுரா அணி திணறியது.

நடராஜன் 3, முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

அந்த அணியில் பிரதியுஷ் சிங், மிலிந்த் தலா 24 ரன்களை அதிகபட்சமாக சோத்தனா்.

தமிழக அணியில் தினேஷ் காா்த்திக் 40, வாஷிங்டன் சுந்தா் 36 ரன்களை எடுத்தனா். திரிபுரா தரப்பில் அஜய் சா்க்காா் 3, நிலம்புஜ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். இறுதியில் 187 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தமிழகம் இந்த போட்டியில் 6-ஆவது வெற்றியை பதிவு செய்தது.

மற்றெறாரு ஆட்டத்தில் சா்வீஸஸ் (190/4) 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரை வென்றது (189).

ரயில்வே ராஜஸ்தன் அணிகள் இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. ரயில்வே (206/8) ராஜஸ்ஜான் 206.

குரூப் பி பிரிவில் பஞ்சாப் அணி (50/7) 3 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியாணாவை (49) வென்றது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD