விண்டீஸ் பெண்கள் அணி அறிவிப்பு

Indian News

Indian News

Author 2019-10-28 07:00:09

img

ஆன்டிகுவா: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் விண்டீஸ் பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது. ஷெமைன் கேம்ப்பெல், செடியன் நேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் விண்டீஸ் அணியுடன் மோதுகிறது. ஒருநாள் போட்டிகள் நார்த் சவுண்டில் வரும் நவ. 1, 3, 6ல் நடக்கவுள்ளன. முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கான விண்டீஸ் பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயத்தால் பங்கேற்காத அனுபவ வீராங்கனைகளான ஷெமைன் கேம்ப்பெல், செடியன் நேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடைசியாக ஜூன் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினர்.

அறிமுக வீராங்கனைகளாக வேகப்பந்துவீச்சாளர் ஷாம்ஷா ஹெக்டர், 'ஆல்-ரவுண்டர்' ஆலியா அல்லெய்ன் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக ஸ்டெபானி டெய்லர் தொடர்கிறார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD