வின்ஸ் அரை சதம்: நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!

Indian News

Indian News

Author 2019-11-01 12:42:03

img

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையே முதலில் டி-20 போட்டி நடக்கிறது. முதலாவது டி-20 போட்டி, கிறிஸ்ட் சர்ச்சில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.

இதனால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராஸ் டெய்லர் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் 2 விக்கெட்டும், சாம் கர்ரன், ரஷித், பிரவுன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 35 ரன்களும் ஜேம்ஸ் வின்ஸ் 59 ரன்களும் கேப்டன் மோர்கன் 34 ரன்களும் எடுத்தனர். ஜேம்ஸ் வின்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN