விராட்கோலிக்கு ஓய்வு... தோனிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை

Vivegam News

Vivegam News

Author 2019-10-26 11:04:19

img

புதுடில்லி: தோனிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை... வங்கதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் தோனிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. 2 தொடர்களிலும் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ரோஹித் ஷர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய கேரளத்தை சேர்ந்த சஞ்சு சாம்சன், மும்பை ஆல் ரவுண்டர் சிவம் துபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பூம்ரா, பாண்டியா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை. முன்னாள் கேப்டன் தோனிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்கள், வங்கதேச டெஸ்ட் தொடர் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 3ஆவது டெஸ்டில் விளையாடிய சாபாஸ் நதீம் மட்டும் நீக்கப்பட்டிருந்தார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD