வெற்றியினைத் தொடர அதிரடியாக களமிறங்கிய இந்திய அணி…

Tamilminutes

Tamilminutes

Author 2019-10-10 14:54:38

இந்தியா – தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையில 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணி ஒரு தொடரைக் கைப்பற்றி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

img


இன்று இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கிய வீரர் ரோகித் சர்மா. உலகக்கோப்பைக்குப் பின்னர், வேறு எந்த டெஸ்ட்டிலும் கிடைக்காத வாய்ப்பினை தற்போது பெற்றதும்போதும் சும்மா வெச்சு செய்துவிட்டார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து திணறச் செய்தார்.

பந்து வீச்சை பொறுத்தவரை அஸ்வின் 7 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தத் தொடரைக் கைப்பற்ற தென் ஆப்ரிக்க அணி நிச்சயம் போராடும்.. பலம் வாய்ந்த இந்திய அணி வெற்றியினைத் தொடர முயற்சி செய்யும், இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN