வெல்கம் பேக் சச்சின்.. ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்!!

Indian News

Indian News

Author 2019-10-16 12:08:58

img

ஒவ்வொரு வருடமும் சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல நாடுகளைச் சார்ந்த வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் என்னும் இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர்.

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் இருந்து சச்சின், ஷேவாக் கலந்து கொள்கின்றனர்.

சச்சின் ஆட்டத்தினைப் பார்க்கவே ஒரு பெரும் கூட்டம் கூடும், 3 மாதங்களுக்கு பின்னால் நடக்க இருந்தாலும், ரசிகர்கள் இப்போது இருந்தே வரவேற்பு அளிக்கத் துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது, இது 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD