வெல்லுமா சென்னை * மும்பையுடன் பலப்பரீட்சை

Indian News

Indian News

Author 2019-10-26 22:06:40

img

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் சென்னை அணி, சொந்த மண்ணில் மும்பையை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்று தமிழக ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடக்கிறது. முதல் நான்கு சீசனில் 2015, 2017-18 என இரு முறை கோப்பை வென்றது சென்னை. கடந்த சீசனில் மிக மோசமாக சொதப்பியது. 18 போட்டிகளில் 2ல் மட்டும் வென்றது.

இம்முறை புதிய சீசன், வீரர்கள் மாற்றம் என்பதால் எழுச்சி பெறும் என நம்பப்பட்டது. மாறாக முதல் போட்டியில் கோவாவிடம் 0-3 என தோற்றது ஏமாற்றமாக அமைந்தது. கடந்த சீசனில் 11, இம்முறை 1 என தொடர்ந்து கடைசியாக பங்கேற்ற 12 போட்டிகளில் சென்னை அணி 9ல் தோல்வி (1 வெற்றி, 2 'டிரா') அடைந்தது.

பலவாறு முயற்சித்தும் வெற்றி மட்டும் கைகூட மறுக்கிறது. ஜீஜே இல்லாத நிலையில் காயத்தில் இருந்து மீண்ட தன்பால் கணேஷ், தோய் சிங், சாங்டே, ஆன்ட்ரே செம்ரி உள்ளிட்டோர் பெரியளவு செயல்படவில்லை. மாற்று வீரர்களாக களமிறங்கிய ரபேல் சிரிவெல்லாரோ, அனிருத் தபா, நெரிஜஸ் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை.

கோல்கீப்பர் விஷால் கெய்த், முதல் போட்டியில் மூன்று கோல்கள் அடிக்க விட்டார். இவருக்குப் பதில் கரண்ஜித் சிங்கிற்கு வாய்ப்பு தரலாம். தற்காப்பு பகுதியில் லுாசியா கோயன், சபியா நம்பிக்கையுடன் போராடினால் எதிரணி கோல் வாய்ப்பை தடுக்கலாம்.

மும்பை அணிக்கு முதல் போட்டியில் கேரளாவுக்கு எதிராக வெற்றி கோல் அடித்தார் செர்மிட்டி. இதனால், 'பார்ம்' இல்லாமல் தவிக்கும் சென்னை அணிக்கு எதிராக மீண்டும் மிரட்ட முயற்சிக்கலாம். இவர்களுடன் மாட்டோ கிரிசிக் (குரோஷியா), இந்தியாவின் ராவ்லின் போர்கஸ், சர்தாக் கவுலியும் அணிக்கு கைகொடுக்க தயாராக உள்ளனர்.

யார் ஆதிக்கம்

சென்னை, மும்பை அணிகள் 10 முறை மோதின. இதில் சென்னை 5ல் வெற்றி பெற்றது. 4ல் மும்பை வென்றது. 1 போட்டி 'டிரா' ஆனது. இதில் சென்னை அணி 16 கோல் அடித்தது. மும்பை அணி சார்பில் 8 கோல் அடிக்கப்பட்டன.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN