ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதிப்பு: ஐசிசி!!

Viralseithigal

Viralseithigal

Author 2019-10-30 12:53:44

img

ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் சூதாட்டம் தொடர்பான தகவலை தெரிவிக்காத காரணத்தால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு 2 வருடம் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க ஷகிப் அல் ஹசன் தலைமையிலான 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஷகிப் அல் ஹசன் தாட்டம் தொடர்பான தகவலை தெரிவிக்காத காரணத்தால் 2 வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே முத்தரப்பு தொடரில் சூதாட்டக்காரர் ஒருவர் அவரை அணுகி உள்ளார்.

இந்த விவகாரத்தை தற்போது ஐசிசியிடம் ஷகிப் அல் ஹசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்தியாவுடனான இருபது ஓவர் தொடர் தொடங்க உள்ள நிலையில், வங்கதேசத்தின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD