ஹர்பஜன்சிங் சாதனையை முறியடித்த அஷ்வின்

Indian News

Indian News

Author 2019-10-07 02:11:00

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி, 145 ரன்கள் விட்டுகொடுத்திருக்கிறார். இரண்டாவது இன்னிங்க்சில் 1 விக்கெட் வீழ்த்தி 44 ரன்களை விட்டுகொடுத்தார். டெஸ்ட் அரங்கில் இவரது 5வது சிறந்து பந்துவீச்சாக அமைந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி 59 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்திருக்கிறார்.

இதுவே இவரின் அதிகபட்ச சாதனை. மேலும் 7 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் ஹர்பஜனை முந்தினார். அவர் டெஸ்ட் அரங்கில், ஒரே இன்னிங்சில் 13 முறை 6 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அஷ்வின் தற்போது 14 முறை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கும்ளே 19 முறை வீழ்த்தி முதல் இடத்தில இருக்கிறார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD