ஹர்பஜன் சிங் போன்று பந்து வீசும் சிறுமி; வைரலாகும் Video...

Zee News India

Zee News India

Author 2019-10-24 15:50:27

img

சென்னை தமிழ் புலவர் ஹர்பஜன் சிங் போன்று பந்துவீசும் சிறுமியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் போட்டி வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இந்த வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் பந்து வீசும் சிறும், அச்சு அசலாய் ஹர்பஜன் சிங் போன்றே பந்து வீசுகின்றார்.

இந்த பதிவின் கீழ் அவர் குறிப்பிடுகையில்., "ஹேய் ஹர்பஜன் சிங்., நாட்டின் பல ஸ்பின்னர்களுக்கு நீங்கள் அகத் தூண்டுதலாய் இருப்பது போன்று, இந்த சிறுமிக்கும் நீங்கள் அகத் தூண்டுதலாய் இருக்கின்றீர்" என குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 15 நொடிகள் ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோவினை ஆகாஷ் சோப்ரா கடந்த புதன் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆகாஷ் பதிவிட்டது முதல் இந்த வீடியோ பல லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

சமீபத்தில் தனது தமிழ் திரைப்பட பிரவேசம் குறித்து அறிவித்த ஹர்பஜன் சிங், இன்றும் பல கிரிக்கெட் ரசிகர்களின் வழிகாட்டியாய் இருக்கின்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், அது நாள் முதல் தமிழில் ட்விட் பதிவிடுவது, தமிழில் கவிதைகள் பதிவிடுவது என சென்னை தமிழ் புலவராகவே அழைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. அந்த வகையில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்காக கடந்த மார்ச் மாதம் UAE-ல் நடைப்பெற்ற போட்டியில் இறுதியாக பங்கேற்ற ஹர்பஜன் சிங், இதுவரை 103 டெஸ்ட் போட்டி, 236 ஒருநாள் மற்றும் 28 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில் முறையே 417, 269 மற்றும் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD