ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் ஆனார் அஸாருதீன்

Indian News

Indian News

Author 2019-09-28 03:47:00

img

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ சிஓஏ அறிவுறுத்தலின்படி அனைத்து மாநில சங்கங்களிலும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றன. பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அக்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் சங்கத் தலைவர் பதவிக்கு முகமது அஸாருதீன் போட்டியிட்டார். இதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அவர் 173 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ் சந்த் 73 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
சிறந்த பேட்ஸ்மேனான அஸாருதீன் கடந்த 1990-இல் இங்கிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் வெற்றியைத் தேடித் தந்தார்.

99 டெஸ்ட்கள், 334 ஒருநாள் ஆட்டங்களில் ஆடிய அஸாருதீன் மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
கடந்த 2000-ஆம் ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் புகாரில் அவர் சிக்கினார். இதனால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.
எனினும் ஆந்திர உயர்நீதிமன்றம், அஸாருதீன் மீதான விசாரணையை முறையாக நடத்தவில்லை என தீர்ப்பளித்தது. தற்போது கிரிக்கெட் நிர்வாகப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் அவர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN