‘வலுவான வீரராக மீண்டு வருவேன்’ - பும்ரா

Tamil Media News

Tamil Media News

Author 2019-09-26 09:00:24

imgThird party image reference

வலுவான வீரராக மீண்டு வருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் குணமடைய குறைந்தது 8 வாரங்கள் ஆகும் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வீரர்கள் காயமடைவது விளையாட்டில் ஒரு அங்கம். காயத்தில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது நம்பிக்கை உயரிய நிலையிலேயே இருக்கிறது. இந்த பின்னடைவில் இருந்து இன்னும் வலுமிக்க வீரராக மீண்டு வருவதே எனது இலக்கு’ என்று கூறியுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN