19 வயது உலக கோப்பை: இந்தியா, இலங்கை பலப்பரீட்சை

Indian News

Indian News

Author 2019-10-25 22:40:41

img

துபாய்: ஐ.சி.சி., 19 வயது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியானது. இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கையை எதிர் கொள்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் 13வது தொடர் அடுத்த ஆண்டு, தென் ஆப்ரிக்காவில் (ஜன. 17-பிப். 9) நடக்கவுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம்பிடிக்கும் அணிகள், நேரடியாக சூப்பர் லீக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

நான்கு முறை கோப்பை வென்ற, நடப்பு சாம்பியன் இந்திய அணி, 'ஏ' பிரிவில் நியூசிலாந்து, இலங்கை, ஜப்பானுடன் இடம்பெற்றுள்ளது. கடந்த முறை பைனலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா 'பி' பிரிவில், இங்கிலாந்து, விண்டீஸ், நைஜீரியாவுடன் இடம்பிடித்துள்ளது. 'சி' பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. தொடரை நடத்தும் தென் ஆப்ரிக்கா 'டி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா இடம்பெற்றுள்ளன.

அனுமதி இலவசம்

நேற்று உலக கோப்பை அட்டவணை வெளியானது. மொத்தம் 24 நாட்கள் போட்டிகள் நடக்கவுள்ளன. முதல் போட்டியில் (ஜன. 17, கிம்பெர்லே) தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஜன. 19ல் இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அடுத்த இரண்டு போட்டிகள் முறையே, ஜப்பான் (ஜன. 21), நியூசிலாந்து (ஜன. 24) அணிகளை சந்திக்கிறது. பைனல் பிப்ரவரி 9ல் போட்செப்ஸ்ட்ரூமில் நடக்கும். அனைத்து போட்டிகளுக்கும் இலவச அனுமதி தரப்பட்டுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD