2ஆவது டெஸ்ட்நாளை :இந்தியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

Indian News

Indian News

Author 2019-10-10 01:45:06

img

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, பூனேயில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

அந்தவகையில், இத்தொடரின் முதலாவது டெஸ்டில் தோல்வியடைந்த தென்னாபிரிக்கா இப்போட்டியில் வெற்றி பெறுவதாயின் பல்வேறு வகைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

முக்கியமானதாக துடுப்பாட்டத்தில் நான்காமிடத்தில் களமிறங்கும் உப அணித்தலைவர் தெம்பா பவுமா ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளதுடன், அணித்தலைவர் பப் டு பிளெஸியிடமிருந்தும் மேலதிக ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

இதேவேளை, பந்துவீச்சுப் பக்கம் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீச வேண்டிய தேவை காணப்படுகின்றது. தவிர, மொஹமட் ஷமி இரண்டாவது இனிங்ஸில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு பிரதானமாக அமைந்த விக்கெட்டுகளை இலக்கு வைக்கும் பாணியை தென்னாபிரிக்கா கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு காணப்படுகின்றது.

முதலாவது போட்டியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் தென்னாபிரிக்கா களமிறங்கியிருந்த நிலையில், தனது வழமையான பலமான வேகப்பந்துவீச்சை முதன்மைப்படுத்தவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் செனுரன் முத்துசாமி, டேன் பீடிட் ஆகிய ஒருவருக்கு பதிலாக லுங்கி என்கிடியை களமிறக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

அதிலும், டேன் பீடிட்டின் பந்துவீச்சிலும் ஓட்டங்கள் பெறப்பட்டபோதும், கேஷவ் மஹராஜ் மற்றும் செனுரன் முத்துசாமியுடன் களமிறங்கும்போது இரண்டு ஒரேவகையான பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டிய நிலையை தென்னாபிரிக்கா இருக்கின்ற நிலையில் பெரும்பாலும் செனுரன் முத்துசாமியையே லுங்கி என்கிடி இப்போட்டியில் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபக்கமாக, இந்தியாவைப் பொறுத்த வரையில் அதேயணியே களமிறங்கக்கூடிய அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றபோதும், இந்திய மண்ணில் சிறப்பாகச் செயற்பட்ட வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ்வைக் கொண்டு இஷாந்த் ஷர்மாவை இந்தியா பிரதியிட்டால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

இந்நிலையில், பூனே ஆடுகளமானது முதலாவது டெஸ்ட் இடம்பெற்ற விசாகப்பட்டினம் மைதானத்தை விட விரைவாக சுழற்சியை வழங்கும் என்ற நிலையில், ரோஹித் ஷர்மா, செட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் முக்கியமான வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD