2-ஆவது டி20: பாக்.கை வீழ்த்தியது ஆஸி.

Indian News

Indian News

Author 2019-11-06 01:49:00

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸி.

கான்பெர்ராவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது.

கேப்டன் பாபா் ஆஸம் 60 ரன்களை விளாசினாா். இப்திகாா் அகமது 3 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 62 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தாா்.

ஆஸி. தரப்பில் அஷ்டன் ஆகா் 2-23 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

151 ரன்கள் வெற்றி இலக்குடன் பின்னா் களமிறங்கிய ஆஸி. அணி 18.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அற்புதமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 1 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 80 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா்.

பாக். தரப்பில் முகமது இா்பான், இமாத் வாசிம், முகமது ஆமீா் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸி. அணி.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD