24-ம் தேதி தோனி குறித்து தெரிவிக்கிறேன் - சவுரவ் கங்குலி

Indian News

Indian News

Author 2019-10-17 16:15:11

img

தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ தலைவராக வர உள்ள சவுரவ் கங்குலியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறுகையில், “நான் 24-ம் தேதி இந்திய அணியின் தேர்வுக்குழுவினரைச் சந்திக்க இருக்கிறேன். அவர்களைச் சந்திககும்போது தோனி குறித்து அவர்கள் என்ன நினைத்திருக்கிறார்கள், கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதை அறிவேன். அதன்பின் தோனியின் எதிர்காலம் குறித்து எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்” என்றார்.

ஒரு அணியின் வீரர் எவ்விதக் காரணமும் இன்றி நீண்ட விடுப்பில் இருப்பது குறித்து கங்குலியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், “தோனி ஏன் ஓய்வில் இருக்கிறார், எதற்காக ஓய்வில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது.

வரும் 24-ம் தேதி தேர்வுக் குழுவினரை நான் சந்தித்துப் பேசுகிறேன். அதன்பின் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன். தோனிக்கு என்ன தேவை என்பதையும் அறிய வேண்டும். இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துவதில் எனக்கு அதிகமான விருப்பம். அதற்கான முயற்சிகளை எடுப்பேன். அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது இப்போதே கூறுவது கடினம். ஒவ்வொரு உறுப்பினருடன் கலந்தாய்வு செய்த பின் முடிவு எடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD