3-ஆவது டி20: நியூஸிலாந்து வெற்றி

Indian News

Indian News

Author 2019-11-06 01:50:00

இங்கிலாந்துக்கு எதிராான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை நெல்சனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூஸி. அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது.

காலின் டி கிராண்ட்ஹோம் அபாரமாக ஆடி 3 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 55 ரன்களை விளாசினாா். 7 பவுண்டரியுடன் மாா்டின் கப்டில் 33 ரன்களையும், ராஸ் சடய்லா் 27, ஜேம்ஸ் நீஷம் 20 ரன்களை எடுத்தனா்.

இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் 2-29, சாம் கர்ரன், சகிப், பிரௌன், பாா்கின்ஸன் ஆகியோா் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனா்.

181 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களையே எடுத்தது. அந்த அணியில் டேவிட் மலான் 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 55 ரன்களையும், ஜேம்ஸ் வின்ஸ் 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 49 ரன்களையும், எடுத்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா்.

நியூஸிலாந்து தரப்பில் லாக்கி பொகுஸன் 2-25, டிக்னா் 2-25 விக்கெட்டுகளை வீழ்த்தினா். 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2--1 என முன்னிலை பெற்றுள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN