3-0 என்ற கணக்கில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை..- கோலி

Indian News

Indian News

Author 2019-10-14 00:42:57

img

இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; விராட் கோஹ்லி பெருமிதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த வெற்றி குறித்து விராட் கோஹ்லி பேசுகையில் ரஹானே, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களை பாராட்டியுள்ளார்.

இது குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது;

அணியின் கேப்டன் என்ற பொறுப்பின் அடிப்படையில் ரன்கள் குவித்தேன். எனது எண்ணம் எப்போதும் அணியின் ஸ்கோரை அதிகபட்சமாக உயர்த்த வேண்டும் என்றே இருக்கும். நீங்கள் அணியை பற்றி யோசிக்க தொடங்கும் போது உங்கள் அழுத்தங்கள் எல்லாம் வெளியேறிவிடும். அணியில் அனைவரும் சத்தமில்லாத கொண்டாட்டத்தில் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் அடுத்த போட்டியில் நாங்கள் சிறு ஓய்வு எண்ணம் கூட இல்லாமல், இதற்கு முன்னர் விளையாடியது போன்றே விளையாடுவோம்.

3-0 என்ற கணக்கில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். எனவே லேசாக விளையாடமாட்டோம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்று கூறினார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN