IND vs SA 1st Test Day 2 Cricket Live Scorecard: இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால்!

Indian News

Indian News

Author 2019-10-03 16:47:32

img

India vs South Africa 1st test day 2 live score: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் (அக்.2) நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் நாளில் 59.1 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி, 202 ரன்கள் எடுத்துள்ளது.


இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் மிக பொறுமையான இன்னிங்ஸ் தொடங்கிய ரோஹித், பிறகு தனது ரிதத்தை கண்டுபிடித்து நேர்த்தியாக விளையாட ஆரம்பித்தார். அரைசதம் கடந்த ரோஹித், ஓப்பனராக தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

அதேசமயம், மாயங்க் அகர்வாலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஸ்கோர் 202/0 என்று இருந்த போது, மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ரோஹித் 115 ரன்களுடனும், மாயங்க் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

இந்தியா: விராட் கோலி (c), ரஹானே(wc) , ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், டீன் எல்கர், டி புருய்ன், பவுமா, டு பிளசிஸ்(c), டி காக்(w), பிலாண்டர், ரபாடா, செனூரன் முத்துசுவாமி, கேசவ் மஹராஜ், டேன் பியட், காகிசோ ரபாடா

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN