IND vs SA 2nd Test Day 1 Live Score : பேக் டூ பேக் சதம் விளாசிய மாயங்க் அகர்வால்!

Indian News

Indian News

Author 2019-10-10 17:17:13

img

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றிப் பெற்றது. அப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் ரோஹித் சதம் விளாசி அசத்தினார். இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்திய அணியில் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

IND vs SA 2nd Test Day 1 Live Updates

இந்தியா பிளேயிங் XI: ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, அஜின்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரிதி மான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

India Score Updates

தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து, ரபாடா பந்தில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மற்றொரு ஓப்பனர் மாயங்க் அகர்வால் அரைசதம் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD