IND vs SA: 3-வது டெஸ்டில் அரைசதம் விளாசிய ரோஹித் சர்மா..!

Indian News

Indian News

Author 2019-10-19 15:40:47

img

இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன் எடுத்து வெளியேற அடுத்து இறங்கிய டக் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 12 ரன்களுடன் வெளியேறினார்.இதனால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சிஅடைந்தனர்.முக்கிய மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வந்த நிலையில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 88 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.அதில் 8 பவுண்டரி , 1 சிக்ஸர் அடங்கும்.

களத்தில் ரஹானே 40 ரன் எடுத்து விளையாடி வருகின்றனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD