India vs Bangladesh 1st T20 Live Updates: தவான் அவுட் - 140 எட்டுமா இந்திய அணி?

Indian News

Indian News

Author 2019-11-03 22:40:47

img

India vs Bangladesh 1st T20 Live Telecast: இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு, இதுவரை ஒரு முழு தொடரை இந்தியா நடத்தியதில்லை. இப்போது முதன் முதலாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவாக இன்றைய முதல் டி20 போட்டி நடைபெறவுள்ளது.

2016 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் டி20 வெற்றி சதவிகிதம் 63.83 என்று உள்ளது. இருப்பினும், இந்தியா டெஸ்ட் போட்டிகளில் அசத்துவது போல, டி20 களங்களில் முழுமையாக டாமினேட் செய்வது கிடையாது.

வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், தமீம் இக்பால் இல்லாவிட்டாலும் பலம் பொருந்திய அணியாகவே அச்சுறுத்துகிறது. கணிக்க முடியாத சவுமியா சர்கர், லிட்டன் தாஸ், 'ஆல் டைம் ஃபார்ம்' பிளேயர் முஷ்பிகுர் ரஹீம், அச்சுறுத்தும் மஹ்மதுல்லா என்று பேட்டிங் வலிமையாக உள்ளது.

டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 6:30 டாஸ் போடப்பட்டு, 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் இப்போட்டியை காணலாம்.

உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மூலம் ஸ்கோர் அப்டேட்டுகளை உடனுக்குடன் நீங்கள் காணலாம்.

இந்தியா பேட்டிங்

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹ்மதுல்லா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் இளம் ஆல் ரவுண்டர் ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி பிளேயிங் XI

ரோஹித் ஷர்மா (c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(wk), ஷிவம் துபே, க்ருனால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, யுவேந்திர சாஹல்.

ஷஃபியுல் இஸ்லாம் ஓவரில், 9 ரன்களில் ரோஹித் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள்:

ரோஹித் ஷர்மா (இந்தியா) - 2451 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) - 2450 ரன்கள்
மார்டின் கப்டில் (நியூசி.,) - 2326 ரன்கள்
சோயிப் மாலிக் (பாக்.,) - 2263 ரன்கள்
பிரண்டன் மெக்கலம் (நியுசி., ) - 2140 ரன்கள்

லோகேஷ் அவுட்:

17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல், அமினுள் இஸ்லாம் ஓவரில் கேப்டன் மஹ்மதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷ்ரேயாஸ் அவுட்:

13 பந்துகளில் 22 ரன்கள் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர், அமினுள் இஸ்லாம் ஓவரில் கேட்ச்சானார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD