INDvsSA:இரட்டை சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால்!

TIMES NOW

TIMES NOW

Author 2019-10-03 17:17:00

img

விசாகப்பட்டினம்: இந்தியா - தென்னாபிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 215 ரன்கள் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நேற்று முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் மயங்க் அகர்வால் 83 ரன்கள் அடித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டத்திலும் அதே போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 371 பந்துகளில் 215 ரன்கள் அடித்து ஒரே டெஸ்ட் போட்டியில் தன் முதல் சதத்தையும், முதல் இரட்டை சதத்தையும் பதிவு செய்தார். இவரது இந்த இன்னிங்ஸில் 23 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் விளாசினார். இறுதியாக அவர் எல்கார் பந்தில் ஆட்டமிழந்தார்.


மயங்க் அகர்வால் இந்த இரட்டை சதத்தின் மூலம் திலிப் சரதேசி, வினோத் காம்ப்ளி, கருண் நாயர் ஆகியோரை தொடர்ந்து தன் முதல் சதத்தை இரட்டை சதமாக பதிவு செய்தவர்கள் வரிசையில் இடம்பெறுகிகிறார். மேலும், வெறும் 8 இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து குறைந்த இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த இந்தியர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார். இதற்கு முன் 2018 -ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 77 அடித்தது அவரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், இன்று இந்த அபார ஆட்டத்தால் அதனை முறியடித்துள்ளார். இந்த போட்டியானது இந்தியாவில் அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD