INDvsSA: விக்கெட் இழப்பின்றி ரோஹித், மயங்க் அபார ஆட்டம்!

TIMES NOW

TIMES NOW

Author 2019-10-02 19:10:24

img

விசாகப்பட்டினம்: இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டு விடாமல் பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டெஸ்டில் முதல் முறையாக ஓப்பனராக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா 115*(174) ரன்கள் அடித்து டெஸ்டில் தனது 4-வது சதத்தை பதிவு செய்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 10 பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் விளாசினார்.

மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 183 பந்துகளில் 83* ரன்கள் அடித்தார். மொத்தம் 11 புவண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அவர் விளாசினார். இருவரும் ஆட்டமிழக்காமல் 59.1 ஓவர் முடிவில் ஸ்கோர் 202/0 என்று இருந்தபோது மழை ஆட்டத்தில் குறுக்கிட்டது. பின்னர் மழை விடாமல் பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.


தென்னாப்ரிக்கா பந்து வீச்சாளர்கள் ரோஹித்-மயங்க் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க முடியாத நிலையில் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD