கோல்கட்டா அணியில் டேவிட் ஹசி

Indian News

Indian News

Author 2019-10-06 16:40:28

img

புதுடில்லி: ஐ.பி.எல்., கோல்கட்டா அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹசி நியமிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோல்கட்டா அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் ஹசி 42, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2008 முதல் 2010 வரை கோல்கட்டா அணிக்காக ஐ.பி.எல்., போட்டியில் விளையாடி உள்ளார்.

தவிர இந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கைல் மில்ஸ் 40, நியமிக்கப்பட்டுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN